என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டீசல் விலையேற்றம்"
சென்னை:
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை (10-ந்தேதி) பாரத் ‘பந்த்’க்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ‘பந்த்’க்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பா.ம.க. எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றி கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநிலத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் கட்சியின் நிலைப்பாடு பற்றி ஜி.கே.மணி கூறியதாவது:-
பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.
இது மக்களை வெகுவாக பாதிக்கும் பிரச்சினை. பொதுவாகவே மக்கள் பிரச்சினை என்றால் முன்னணியில் நின்று குரல் கொடுப்பது பா.ம.க.
எனவே மக்களுக்கான இந்த போராட்டத்தையும் ஆதரிக்க பா.ம.க. முடிவு செய்துள்ளது. நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தை வெளியில் இருந்து பா.ம.க. ஆதரிக்கிறது.
இவ்வாறு ஜி.கே.மணி கூறினார். #FuelPrice #BharatBandh #GKMani
சென்னை:
மத்தியில் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து அனைத்து துறைகளையும் சீரழித்த காங்கிரசும் அதற்கு துணை போன தி.மு.க.வும் மக்களை ஏமாற்றுவதற்காக ‘பந்த்’ அறிவித்துள்ளன.
மக்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. பெட்ரோல்-டீசல் விலையை மனம்போல் உயர்த்துவோம் என்று ஆட்சியில் இருப்பவர்கள் நினைப்பார்களா? எங்களுக்கும் இந்த விலை உயர்வில் விருப்பம் இல்லை தான். ஏன் விலை ஏறுகிறது? இந்த சிக்கலுக்கு யார் காரணம் என்பதை யோசிக்க வேண்டும்.
மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசும், தி.மு.க.வும் தேர்தல் ஆதாயத்துக்காக எண்ணெய் நிறுவனங்களை கடனில் தள்ளினார்கள். லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடனில் சிக்கி தத்தளித்தன. அந்த கடனை அடைக்க வேண்டாமா? அவர்கள் செய்த தவறுகளை திருத்தி வருகிறோம். அதனால் சில சிரமங்களை மக்களும் ஏற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்கிறார்கள். மத்திய அரசும் அதைத்தானே விரும்புகிறது. ஆனால் மாநில அரசுகளின் நிலை என்ன?
ஜி.எஸ்.டி. கவுன்சிலில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளார்கள். அந்த கவுன்சில்தான் வரி நிர்ணயம் செய்கிறது. ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோலிய பொருட்களை கொண்டுவருவதை ஏற்பார்களா?
50 வருடமாக மக்களை ஏமாற்றியே ஆட்சி செய்த காங்கிரஸ், தி.மு.க.வின் ஏமாற்று வேலைதான் இந்த ‘பந்த்’ நாடகமும்.
எங்கள் கொள்கை நாட்டில் தூய்மையான, நேர்மையான நிர்வாகம் வேண்டும். கடனில் சிக்கி கிடக்கும் நிறுவனங்களை மீட்டு மக்களுக்கு சிறப்பான சேவை செய்ய வைக்க வேண்டும். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.
உண்மை நிலையை உணர்ந்து எதிர்க் கட்சிகளின் ‘பந்த்’ நாடகத்தை தமிழக மக்கள் முறியடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Radhakrishnan #FuelPrice #BharatBandh
ராமேசுவரம்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வு கடந்த 10 நாட்களாக மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் விசைப்படகு மீனவர்களுக்கு 1800 லிட்டர் டீசலுக்குத்தான் மானியம் வழங்கப்படுகிறது. அதன் பிறகு தேவைப்படுபவர்கள் கூடுதல் விலை கொடுத்து தான் டீசல் வாங்க வேண்டும். கூடுதல் விலை கொடுக்க வேண்டியதிருப்பதால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டீசல் விலையை உடனே குறைக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. 105 விசைப்படகுகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #fishermenstrike #FuelPrice
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்